நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உலக பார்வையில் இந்தியாவின் நிலை பெருமளவில் மாறியுள்ளதாகவும், பிற நாடுகள், பிரச்சனைகளை தீர்க்க இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் கூறினார். ஆனால், இந்தியா, தனது பிரச்சனைகளை தீர்க்க, எப்போதும் பிற நாடுகளை சார்ந்திருக்காது என்றார். ஏழைகளுக்கு, வலிமை, சக்தி அளிக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ள நிலையில், நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள், பெண்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். மேலும் நாட்டில் தீவிரவாதத்தை ஒடுக்கிய மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த அவர், ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டதாகவும் கூறினார். குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.
Discussion about this post