தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பங்களிப்பை 10 சதவீதத்திலிருந்து14 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் மத்திய அரசின் பங்களிப்பாக 10 சதவீதம் இருந்து வந்தது. இதனை உயர்த்த கோரிக்கைகள் எழுந்த நிலையில், மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, மத்திய அரசின் பங்களிப்பு 14 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியமாக 50 சதவீத தொகை மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 60 சதவீதமாக ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ள ஒப்புதல் வழங்கியதுடன், இதற்கு வரி விலக்கும் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post