மத்திய அரசின் பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்முரமாக உள்ளார்.
2வது முறையாக பிரதமராக பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமனுக்கு இந்தமுறை நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்த மாதம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. இந்தநிலையில் மத்திய பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் நிர்மலா சீதாராமன் மும்முரமாக உள்ளார். அதன்படி நாளை விவசாயத்துறையினருடன் அவர் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். அப்போது விவசாயத்தை மேம்படுத்த செயல்படுத்தப்பட இருக்கும் திட்டங்களுக்கு தேவையான நிதி குறித்து அவர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசிப்பார் என தெரிகிறது. இதேபோல் அடுத்தடுத்த நாட்களில் வெவ்வேறு துறைகளை சேர்ந்தவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி மத்திய பட்ஜெட்டை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post