கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்வதை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனா, இத்தாலி, ஈரான், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு மத்திய அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியது. இந்த நாடுகளுக்கான பயண விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.
தற்போது, இந்த பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ குமார் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில சுகாதாரத்துறையினருடன் தொடர்பில் உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வந்துள்ளவர்கள் 14 நாட்களுக்கு வீட்டில் இருந்தபடியே சுயமாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும், மத்திய அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.