இந்திய கடற்படைக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கிய ஒப்பந்தத்தில் ராகுல் காந்தி ஆதாயம் பெற்றதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார்.
2002 ஆம் ஆண்டு பேக் ஆஃப் சர்வீஸ் என்ற நிறுவனம் இந்தியாவில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பெயரிலும், இங்கிலாந்தில் ராகுல் காந்தி மற்றும் உல்ரிக் மிக்நைட் பெயரிலும் பதிவு செய்யப்படுள்ளது என்று ஜெட்லி கூறினார். 2010 இல் அந்தநிறுவனம் மூடப்படதாகவும், ஆனால் ராகுல் காந்தியின் பங்குதாரர் வேறு சில நிறுவனங்களில் பங்குதாரராக இருந்துள்ளார் எனவும் அவர் கண்டனம் தெரிவித்தார். உல்ரிக் மிக்நைட்க்கு பிரான்ஸ் நிறுவனம் மூலம் இந்திய கடற்படைக்கு நீர்முழ்கி கப்பல்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ராகுல் காந்தி ஆதாயம் பெற்றிருப்பதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி குற்றம் சாட்டினார்.
Discussion about this post