திருவாரூரில் மத்திய கூட்டுறவு வங்கியில் சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு பண மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூரில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர கிளை வங்கியில், கடந்த 2013 ம் ஆண்டில், கணினி மூலமாக நடைபெற்ற பண பறிமாற்றத்தில், 3 கோடியே 34 லட்சம் ரூபாய் கையாடல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில், 18 பேர் மீது வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், வங்கியின் கணினி ஆபரேட்டர் அருள் முருகன், அவரது உறவினர்களின் வங்கிக்கணக்குகளில், 3 கோடியே 34 லட்சம் ரூபாய் வரவு வைத்து பண மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வங்கி மேலாளர் சசிகுமார், கணினி ஆபரேட்டர் அருள் முருகன் உட்பட 5 பேரை, வணிக குற்ற புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் வங்கி ஊழியர்கள் 13 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 5 பேரும், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
Discussion about this post