கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த மத்தியக் குழு, முகாம்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்தது.
கஜா புயல் பாதிப்பில் வீடு, உடைமை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வகையிலும் பேரிழப்பை டெல்டா மாவட்டம் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, சேதத்தை ஆய்வு செய்ய வந்த டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான 7 பேர் கொண்ட மத்தியக்குழு 3-ம் நாளான இன்று நாகையில் ஆய்வு செய்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளின் வயல், தோட்டங்களையும், வேரோடு சாய்ந்து கிடக்கும் தென்னை உள்ளிட்ட பணப்பயிர் மரங்களையும் கணக்கிட்டுக் கொண்டனர். வழிநெடுக மோசமான நிலையில், அழிந்து கிடந்த நெற்பயிர் உள்ளிட்ட வயல்களையும் அவர்கள் பார்வையிட்டனர். முகாம்களில் இருந்த மக்களுக்கு ஆறுதல் தெரிவித்த மத்தியக்குழு, பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகள் மத்திய அரசிடம் அளிக்கும் அறிக்கையில் பிரதிபலிக்கும் என்றனர்.
Discussion about this post