நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று துவங்குகிறது.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், 2020 – 2021ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காலை 11 மணியளவில் உரை நிகழ்த்துகிறார்.
இதனையடுத்து , 2020-2021ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். மொத்தம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி, இன்று முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறுகிறது.