டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேதியை தெரிவிக்குமாறு விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 26 ஆவது நாளை எட்டியுள்ளது. போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் டெல்லியின் அனைத்து எல்லைகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று 24 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணை செயலாளர் விவேக் அகர்வால், 40 விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் விளக்க கடிதம் தொடர்பாக விவாதிக்க வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் தொடரும் நிலையில் 11 நாட்களுக்கு பிறகு மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
Discussion about this post