தந்தையர் தினத்தை முன்னிட்டு திரைப் பிரபலங்கள் பலர், அவர்கள் தந்தையுடன் இருக்கும் இனிமையான புகைப்படத்தினை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
நேற்று தந்தையர் தினத்தை முன்னிட்டு அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை வாட்ஸ் அப் ஸ்டேடஸ் மூலமும் சமூக வலைதளங்களில் போட்டோ ஷேர் செய்தும் அன்பினை வெளிபடுத்தினர்.திரைப்பிரபலங்களும் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தையுடனான போட்டோவினை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா ‘இது போன்று உங்களுடன் வேடிக்கையாக விளையாடுவது பிடிக்கும். நீங்கள் கூலான டாடி.கடினமான விஷயமாக இருந்தாலும், அதன் விளைவு மோசமாக இருந்தாலும் சரியானதை செய்வதற்கு கற்று கொடுத்தற்கு நன்றி.லவ் யூ பாப்பா’ என போஸ்ட் செய்துள்ளார்.
காதல் கண் கட்டுதே , ஏமாளி ஆகிய திரைப்படங்களில் நடித்த அதுல்யா தந்தையர் தினத்தை முன்னிட்டு’ என் உலகம் ❤️ என் உயிர் ❤️ அப்பா’ என கூறியுள்ளார்.
சகுனி, மாஸ் திரைப்படங்களில் நடித்த நடிகை பிரனிதா ‘ உங்களை கொண்டாட ஒரு நாள் போதாது அப்பா ‘ என கூறி தந்தையர் தின வாழ்த்தினை கூறியுள்ளார்.
போடா போடி,விக்ரம் வேதா, தாரை தப்பட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்து தனது சரளமான பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்த வரலட்சுமி சரத்குமார்’ என்னுடைய சூப்பர் அப்பாக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள் என இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.