தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்ததை வரவேற்று அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். சட்டப் பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருநெல்வேலியை இரண்டாக பிரித்து தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்றும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த அறிவிப்பு தென்காசி பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. மேலும் இதனை கொண்டாடும் வகையில், தென்காசி பழைய பேருந்து நிலையம் முன்பு, அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் குமார் பாண்டியன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post