ஆடிப்பெருக்கு விழா தமிழகம் முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளநிலையில், தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா, விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு விழாவையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இதனால், ஸ்ரீரங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆடிப்பெருக்கில் காவிரியில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும் என்பது ஐதீகம். இதனால், காவிரி அன்னையை வழிபடுவதோடு, மகாலட்சுமி உள்ளிட்ட பெண் தெய்வங்களையும் பெண்கள் வழிபடுகின்றனர். இதனால், கோவில்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. புதிதாக திருமாணம் ஆன பெண்கள், கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர், தாலியை புதிதாக மாற்றி அணிந்து கொள்கின்றனர். ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி, தருமபுரி, திருச்சி மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
Discussion about this post