விழுப்புரத்தில் அதிமுகவின் 48-ம் ஆண்டு தொடக்க நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார். கழக கொடியினை ஏற்றி வைத்த அமைச்சர்,பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதேபோல், கடலூரில் அதிமுகவின் 48-ம் ஆண்டு துவக்க நாளையொட்டி தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் திருவுருவச்சிலைளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கழக கொடியினை ஏற்றி வைத்த அவர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
Discussion about this post