ஜனவரி மாதம் 23ஆம் தேதி 1897ஆம் ஆண்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். இவரது பிறந்த நாளை ஆண்டுதோறும் பராக்கிரம தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நேதாஜி தனது இளமைக்காலத்தில் இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வினை எழுதி 1919 ல் தேர்ச்சியானார். இவரது ஆன்மீக சுவாமி விவேகானந்தர் ஆவார். சுதந்திரப் போராட்டத்தில் ஆரம்பகட்டத்தில் காந்தியுன் ஒத்திசைவாகத்தான் செயல்பட்ட வண்ணம் இருந்தார். முதன் முறையாக காந்தி-இர்வின் ஒப்பந்தத்தினால் 1931ல் காந்தியுடம் முரண்பாடு கொண்டார். பிறகு 1938ல் நடந்த காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்ற நேதாஜி காந்தியுடனான கருத்து முரணில் 1939 தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து பார்வேடு ப்ளாக் என்ற கட்சியினை தொடங்கினார்.
சுதந்திரப் போராட்டத்தின் போது இந்திய தேசிய இராணுவத்தினை கட்டமைத்தப் பெருமை இவரையே சாரும். நேதாஜியின் புகழ்பெற்ற வாசகம் டெல்லியை நோக்கி முன்னேறுங்கள் என்பதாகும். மேலும் நேதாஜி 1945ஆம் ஆண்டு தைவான் விமானத்தில் செல்லும்போது விமான விபத்தினால் இறந்துவிட்டார் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அவரது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிரதமர் மற்றும் குடியரசுதலைவர் போன்ற தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேதாஜியின் பிறந்தநாளான பராக்கிரம தினத்தை சிறப்பிக்கும் விதமாக அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு நாட்டிற்காக உயிரிழந்த இராணுவ வீரர்களின் பெயரினை சூட்டியுள்ளார்.