நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே 15 கோடி ரூபாய் செலவில் ரயில்வே நுழைவுப் பாலம் அமைக்கும் பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையம் மற்றும் பள்ளிபாளையம் ஆகிய பகுதியில் நடைபெற்ற அரசின் பல்வேறு நிகழ்சிகளில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டார்.
அப்போது 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் குப்பை சேகரிக்கும் வாகனங்களையும் பணியாளர்களுக்கு வழங்கினார்.
இதனையடுத்து காவிரி ஆற்றின் குறுக்கே 15 கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே நுழைவுப் பாலம் அமைக்கும் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்ட அமைச்சர், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்பை அதிகரிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post