சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நாடு முழுவதும் 110 நகரங்களில் இன்று நடைபெறுகிறது.
இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டுக்கு 2 முறை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. சிடெட் மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல்தாள் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், இரண்டாம் தாள் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். இன்று நடைபெறும் தேர்வை சுமார் 15 லட்சம் பட்டதாரிகள் எழுதுகின்றனர். நாடு முழுவதும் 110 நகரங்களில் நடைபெறும் இந்த தேர்விற்கு 2,400 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை www.ctet.nic.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
Discussion about this post