CBSE பாடத்திட்டத்தில் பயிலும் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. பல்வேறு மாநில அரசுகளும் மாணவர்களின் நலனை கருத்தில், மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் CBSE பாடத்திட்டத்தில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுகிறார்கள் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 9ஆம் மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளித் தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post