சி.பி.எஸ்.இ வழியில் 10 ம் வகுப்பு தேர்வெழுதியவர்களுக்கு இனி ஒரே சான்றிதழ் வழங்க சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.
சி.பி.எஸ்.இ வழியில் பயிலும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு சான்றிதழானது, மதிப்பெண் சான்றிதழ், கல்வி சான்றிதழ் என இரண்டு சான்றிதழ்களாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாநில வழிக்கல்வியில் வழங்கப்படுவது போல், சி.பி.எஸ்.இ வழியில் 10 ம் வகுப்பு தேர்வெழுதியவர்களுக்கும் ஒரே சான்றிதழ் வழங்க சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.
அதன் படி இனி, மதிப்பெண் சான்றிதழ், கல்வி சான்றிதழ் என தனித்தனியாக வழங்காமல், சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு தேர்வெழுதியவர்களுக்கு ஒரே சான்றிதழாக வழங்கப்படும்.
அதே சமயம், 12-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு, வழக்கமாக 2 சான்றிதழ்கள் வழங்கும் முறையில் மாற்றம் இல்லை எனக்கூறப்படுகிறது. சி.பி.எஸ்.இ. தேர்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவுகளுக்கு நிர்வாக குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
Discussion about this post