சாரதா சீட்டு நிதி மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கொல்கத்தா மாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
மேற்குவங்கம், ஒடிசா, அசாம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கானோரிடம் சீட்டு நிதி பிரித்துப் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு மேற்குவங்கக் காவல்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை முதலில் விசாரித்த காவல் அதிகாரி ராஜீவ்குமார் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக நடந்துகொண்டதாக சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ராஜீவ்குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
தற்போது ஏ.டி.ஜி.பி.யாகப் பணியாற்றி வரும் ராஜீவ் குமார் ஒருமாத விடுப்பில் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரிடம் சம்மனைக் கொடுக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
Discussion about this post