சிபிஐ-யின் இயக்குநராகயிருந்த அலோக் வர்மாவும்,சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தனாவும் ஒருவர் மீது ஒருவர் சரமாரி ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொண்டனர். இதையடுத்து மத்திய அரசு இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது. பின்னர் நாகேஸ்வர ராவ் தற்காலிக சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் பதவி பெற்றார்.
இருப்பினும் இறுதி முடிவு எடுக்கும் பிரதமர் தலைமையிலான உயர் நிலைக்குழு அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்து, அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சிபிஐ-யின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
மேலும் அவர் 2 ஆண்டுகாலம் பதவி வகிப்பார் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக, ரிஷிகுமார் சுக்லா கடந்த 1983-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் பதவி வென்று, மத்திய பிரதேச மாநிலத்தில் டிஜிபியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post