ஐ.என்.எஸ்., மீடியா முறைகேடு தொடர்பாக, சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.
ஐ.என்.எஸ்., மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து கைது நடவடிக்கையை தவிர்க்க ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு இரவு 11.30 மணியளவில் வந்த சிபிஐ அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதில், அடுத்த 2 மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு வந்து சென்றதை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர். இதனால், ப சிதம்பரத்திற்கு நெருக்கடி முற்றி உள்ளது.
Discussion about this post