செப்டம்பர் 5ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இருந்து ஜாமின் கேட்டு சிதம்பரம் தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படது. இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிதிமன்றம், செப்டம்பர் 5ஆம் தேதி வரை காவலை நீட்டிக்க உத்தரவிட்டது. இதையடுத்து வயது மூப்பு காரணமாக திகார் சிறையில் அடைக்க வேண்டாம் என சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், காவல்துறைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post