சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்திற்கு எதிரான வழக்கில் இருந்து, மேலும் ஒரு நீதிபதி விலகியுள்ளார். சிபிஐ இயக்குனர் பதவி காலியாக இருந்த நேரத்தில், இடைக்கால இயக்குனரை நியமித்தது விதிகளுக்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிபிஐ புதிய இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் இருப்பதால், விசாரணை அமர்வில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகினார்.
நீதிபதி ஏ.கே.சிக்ரியும் வழக்கில் இருந்து விலகினார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மற்றொரு நீதிபதி என்.வி. ரமணா வழக்கில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதனால், விசாரணை தொடங்குவது மேலும் தாமதமாகி உள்ளது.
Discussion about this post