லஞ்சம் பெற்ற புகாரில், இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகள் 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
இந்திய விளையாட்டு ஆணையத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக லஞ்சம் பெற்றதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ., இந்திய விளையாட்டு ஆணையத்தின் வளாகத்தில் அதிரடி சோதனையை மேற்கொண்டது. சிலரிடம் நடைபெற்ற விசாரணையில் தகவல்கள் உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, விளையாட்டு ஆணைய இயக்குநர் உள்பட 4 அதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளது.
Discussion about this post