முகிலன் தொடர்பாக 148 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சூழலியல் ஆர்வலர் முகிலன் காணாமல் போன விவகாரம் தொடர்பாக கடந்த 6 நாட்களில் மட்டும் சிபிசிஐடி போலீசார் 148 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

முகிலனை கண்டுபிடித்து தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் நிர்மல்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், முகிலன் மாயமான விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியுள்ள நிலையில், பொது இடங்களில் முகிலன் படம் அச்சிடப்பட்ட நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். முகிலனின் மனைவி உள்ளிட்ட 148 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version