திருப்பதியில் பிடிபட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன்

திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் தமிழக சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சமூக செயற்பாட்டாளரான முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மாயமானார். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்தநிலையில், திருப்பதி ரயில் நிலைய காவல்துறையின் பிடியில் அவர் இருக்கும் வீடியோ வெளியாகினது. இதையடுத்து ஆந்திர மாநில காவல்துறையினர் முகிலனை திருப்பதியில் இருந்து ரயில் மூலம் வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அழைத்து வந்தனர். அங்கு தமிழக காவல்துறையினரிடம் முகிலனை ஒப்படைத்தனர்.

பின்னர் முகிலன் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து முகிலனை சென்னை அழைத்து வந்துள்ள சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூடங்குளம், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்களில் பங்கெடுத்தவர் முகிலன் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version