கிசான் திட்ட முறைகேடு – புகார்கள் மற்றும் தகவல்கள் தெரிவிக்க எண்கள் வெளியீடு

கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக, தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் மூலம் புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் என சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் கிசான் திட்டத்தில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக கண்டறியப்பட்டு, சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. அதுதொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையில் இதுவரை 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மோசடியில் ஈடுபட்ட 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

கிசான் திட்ட முறைகேடு தொடர்பான புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க விரும்பினால், 044-2851 3500, 044-2851 2510 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும், 94981 81035 என்ற எண்ணில் வாட்ஸப் மூலமாகவும், cbcid2020@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடு தொடர்பாக தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும், சரியான தகவல்கள் அளிப்பவர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படும் என்றும் மத்திய குற்றப்பிரிவு கூறியுள்ளது.

Exit mobile version