உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட இடத்தில் சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் ஆய்வு

நெல்லையில் முன்னாள் மேயர் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட இடத்தை சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தலைமையிலான காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.

திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் ஆகிய மூவரும், கடந்த 23 ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில், திமுக பெண் நிர்வாகியான சீனியம்மாள் மகன் கார்த்திக் ராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்த கொலை நடந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர் கார்த்திக் ராஜை, காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர் ஆகியோர் முன்னிலையில் சிபிசிஐ டி.ஐ.ஜி சங்கர் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version