கரூர் ஸ்டேட் பாங்க் காலனி அருகில், வடிகால் அமைக்கும் பணியைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார். அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், காவிரி குடிநீர் இனி அனைவருக்கும் சமமாகத் தான் வரும் என்று கூறினார். குடிநீரை அவரவர் விருப்பத்திற்கு எடுக்க முடியாது என்று கூறிய அவர், அனைவருக்கும் ஒரே விதமான கூட்டுக் குடிநீர்த் திட்டம் தான் இருக்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
அரசு என்பது மக்களுக்கானது என்றும் அதை மதித்து மக்களும் இணைந்து செயல்பட்டால் தான் எந்த ஒரு திட்டத்தினையும் செயல்படுத்த முடியும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.