காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் டெல்லியில், அதன் தலைவர் மசூத் உசைன் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
மத்திய நீர்வளத் துறையின் சேவா பவனில் நடைபெறும் கூட்டத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில், தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு திறந்து விட மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. எனினும் இதுவரை கர்நாடக அரசு காவிரி நீரைத் திறந்து விடவில்லை. மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
இதனால் இன்றைய கூட்டத்தில் இப்பிரச்சனைகள் குறித்து விவாதிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 30 டி.எம்.சி நீரையும் தாமதிக்காமல் தருவதற்கு வலியுறுத்தப்படும் எனத் தெரிகிறது.
Discussion about this post