காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் இன்று பிற்பகல் டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை ஆணையத்தில் நடைபெறுகிறது.
காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை ஆணையத்தில் நடைபெறுகிறது. இதுவரை ஜூன் மாதத்திற்கான தண்ணீரை கர்நாடக அரசு திறக்கவில்லை. இந்நிலையில், வருகிற 25 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். கடந்த முறை நடந்த கூட்டத்தில் அணையின் நீர் இருப்பு குறித்த தரவுகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எழுத்து வடிவமாக சமர்ப்பித்தனர். தமிழக அரசு, கர்நாடக அரசு ஜூன் மாதத்துக்கான நீரை உடனடியாக திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நிலையில் இன்று நடைபெறவுள்ள காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post