டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
காவிரி நதி நீரை பங்கிடுவது தொடர்பாக தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் அடங்கிய காவிரி ஒழுங்காற்றுக்குழு, அவ்வப்போது கூடி நதிநீர் பங்கீடு தொடர்பாக விவாதித்து வருகிறது. அந்த வகையில் இதுவரை 14 காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டங்கள் நடைபெற்று உள்ளன.
இந்தநிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 15-வது கூட்டம் ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் இன்று நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் நான்கு மாநில பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.
Discussion about this post