அரியலூர் மாவட்டத்தில் முந்திரி சாகுபடியை அதிகரிக்க முந்திரி ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஆண்டிமடம், செந்துறை, உடையார்பாளையம் ஆகிய மூன்று தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 27 ஆயிரத்து 671 ஹெக்டேர் பரப்பளவில் முந்திரி விவசாயம் நடைபெறுகிறது. இங்கு போதிய மழை இல்லாததால் முந்திரி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வெயில் காரணமாக தாமதமாக பூத்த முந்திரி பூக்கள் கருகி உதிர்ந்துவிட்டதால மகசூல் வெகுவாக பாதித்துள்ளது. இந்த நிலையில் முந்திரி கொள்முதல் விலையும் குறைவாக இருப்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 80 கிலோ முந்திரிக் கொட்டை மூடையானது 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. தற்போது ஏழாயிரம் ரூபாய்க்கே விற்பனையாவதாக தெரிவிக்கிறார்கள் .
Discussion about this post