உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், கடந்த இரண்டு ஆண்டுகளில் பணப்புழக்கம் 20 லட்ச கோடி ரூபாயை தாண்டி உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பணப்புழக்கம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், உயர்பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு பணப்புழக்கம் 17 லட்சத்து 97 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது புதிதாக 50 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி வரையிலான பணப்புழக்கம் 20 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8 தேதி இரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் 200, 100, 50 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பணமில்லா பரிவர்த்தணை என்பது சவாலான ஒன்றாக மாறியுள்ளது.