குடிசை மாற்று வாரிய வீடுகளை, குறைந்த விலையில் வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட வந்த தாய் மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்தனர்
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான, 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதற்கருகில் உள்ள செம்மஞ்சேரி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சித்ரா என்ற மரியபாத்திமா. இவரது மகன் அமல்ராஜ். இவர்கள், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மேடவாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், வாடகை வீட்டில் வசிக்கும் மக்களை குறிவைத்து, அரசு கட்டிடத்தில் புதிய சொந்த வீட்டை, குறைந்த விலையில் வாங்கி தருவதாக கூறி, 30 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை பணம் பெற்றுள்ளனர்.
வெகுநாட்களாகியும், வீடு தராததை கேட்டவர்களுக்கு, போலி சான்றிதழை வழங்கியுள்ளனர். இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் தாய் மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், 100க்கும் மேற்பட்டோரிடம், 30 லட்சத்துக்கும் மேல் அவர்கள் ஏமாற்றியது தெரிய வந்தது.
Discussion about this post