இந்து தீவிரவாதி என்ற வார்த்தையை பயன்படுத்திய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் பிரசாரம் செய்த கமல்ஹாசன், சுந்தந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என காந்தியை படுகொலை செய்த கோட்சேவை குறிப்பிட்டு பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கமல்ஹாசனுக்கு எதிராக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கரூர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ராமகிருஷ்ணன் புகார் அளித்தார்.
இதனையடுத்து கமல்ஹாசன் மீது 153ஏ பொது இடங்களில் மதக் கலவரங்களை தூண்டுதல், 295ஏ இந்து மதத்துக்களின் மனதை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post