ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் ஓட்டுனர்கள் மீது வழக்கு

ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் வாகன ஓட்டிகள் 616 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஆன்லைன் மூலம் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதில் உணவினை இருப்பிடத்திற்கே கொண்டு வந்து தரும் வாகன ஓட்டிகள், உணவினை விரைவில் கொடுப்பதற்காக, சாலை விதிகளை மீறி, விபத்துகள் ஏற்படும் விதமாகவும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் வாகனங்களை இயக்கி வந்தனர்.

இதனையடுத்து, இந்த விதிமீறல்களை தடுக்க, பெருநகர சென்னை காவல்துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி, நேற்று ஒருநாள் மட்டும், உணவு விநியோகிக்கும் போது சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் 616 மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version