சாலையோரம் வசிப்பவர்களை கண்டறிந்து மருத்துவ பரிசோதனை செய்ய தனி குழு அமைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மத்திய சுகாதார துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நடமாடும் பரிசோதனை மையங்களை அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல் தமிழக அரசு சார்பில், நாள் தோறும் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. மத்திய மாநில அரசுகளின் விளங்கங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.
Discussion about this post