சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.
அண்மையில் சின்னதம்பி என்னும் காட்டுயானை வனத்துறைக்குள் விடப்பட்டபின்னர், மீண்டும் ஊருக்குள் புகுந்தது. இந்நிலையில் சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற வனத்துறை முடிவு எடுத்தது. இந்நிலையில் இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் யானைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்வது தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் என்றும், யானை மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், தீர்வு காண்பதற்கு குழு அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் யானை செல்லும் பாதைகளை மேம்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு இன்று பிற்பகல் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
Discussion about this post