விருதுநகர் அருகே ஆமத்தூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை சேர்ந்த நீலமலை என்பவர் சென்னையில் இருந்து தனது காரில் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆமத்தூர் என்ற இடத்தை கடந்த போது தீடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு தீ பிடித்துள்ளது. இதை உணர்ந்த ஓட்டுநர் காரை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு உடனடியாக கீழே இறங்கியதால் உயிர்தப்பினார். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து வாகனத்தை அப்புறப்படுத்தினர்.
Discussion about this post