கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாகவும், வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், அச்சத்துடன் முடங்கிவிட முடியாது, அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம் எனவும், அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் எனவும் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post