அ.தி.மு.க.வின் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் காங்கேயம் கொங்கு மணிமாறன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோடு அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கேசி கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வேட்பாளர் அறிமுகம் செய்து வைத்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தின் உரிமையை தொடர்ந்து பெற்றிடவும், தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், மத்தியில் நிலையான ஆட்சி வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
Discussion about this post