திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்படும் என்று மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் மருத்துவம் குறித்து திருவள்ளூர் தலைமை மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், செய்தியாளரிடம் பேசிய அதன் இயக்குநர் ருக்மணி, திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்தகட்டமாக, புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு ஏற்படுத்த முயற்சி செய்யப்படும் என்றும் கூறினார்.
Discussion about this post