அரியவகை புற்று நோய்க்கு நிதி திரட்ட சைக்கிள் மூலம் உலகை சுற்றி வரும் நெதர்லாந்த் நண்பர்கள் தமிழகம் வந்தடைந்தனர்.
நெதர்லாந்த் நாட்டை சேர்ந்த சர்க்கோமா என்ற இளம் பெண் அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த புற்று நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதற்கான ஆராய்ச்சிக்கு நிதி திரட்ட அவரது நண்பர்கள் ஒவ்க்கர் மற்றும் ஹெல்கின் இருவரும் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 260 நாட்களில் இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கிரீஸ், துருக்கி, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் உள்ளிட்ட 24 நாடுகளில் சைக்கிளில் பயணித்த அவர்கள் இந்தியா வந்துள்ளனர். இதுவரை 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்த அவர்கள், பொள்ளாச்சி, கோவை வழியாக கர்நாடக செல்ல திட்டமிட்டுள்ளனர்.
Discussion about this post