தாலிபான்களுடனான அனைத்துவித அமைதிப் பேச்சுவார்த்தைகளையும் ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்
ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட தாலிபான்களுடன் அமெரிக்கா தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் தாலிபான்கள் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மறுபுறம் அரசுப் படையினர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் தாலிபான்களால் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் ஒரு அமெரிக்க வீரர் உட்பட 11பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தாலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் தற்போது வாபஸ் பெறப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு அந்நாட்டு வீரர்களுக்கு மிகுந்த ஆபத்தாக முடியும் என தாலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
Discussion about this post