துப்பறிவாளன், வீரசிவாஜி, 96 ஆகிய திரைப்படங்களை தயாரித்த “மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்” நிறுவனம், நடிகர்களுக்கு ஊதிய பாக்கி வழங்கப்படாமல் உள்ளது. மேற்கண்ட திரைப்படங்கள் திரையிடும் கடைசி நேரத்தில் நடிகர்களின் சூழ்நிலையை இந்த தயாரிப்பு நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தொடர்ந்து ஊதியம் வழங்காமல் படங்களை திரையிட்டுள்ளது.
படம் வெளியீட்டின் போது இக்கட்டான சூழ்நிலையில் என்றும் நடிகர்கள் தங்கள் வருமானத்தை விட்டுக்கொடுத்தே தயாரிப்பாளர்களுக்கு உதவி வருகிறார்கள். ஆனால் அந்நற்செயலை பலவீனமாக எடுத்துக்கொண்டு சில தயாரிப்பாளர்கள் நடிகர்களை நிர்பந்தப்படுத்துவது அல்லது பரஸ்பரம் ஒத்துக்கொண்ட சம்பளத்தை தர மறுப்பது என்பதை வழக்கமாக்கி கொண்டது.
கடந்த காலங்களிலிருந்தே பல தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு இதுப்போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் இதுகுறித்து நிர்வாகக்குழு கலந்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது, இனிவரும் காலங்களில் இதுப்போன்று செயல்படும் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் மற்றும் தயாரிப்பாளருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்ந்த உறுப்பினர்கள் (நடிகர்கள் மற்றும் நடிகையர்கள்) எந்த ஒரு நிகழ்விற்கும் திரைப்படங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது. மேலும், மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பு நிறுவனம் சம்பந்தமான எந்த ஒரு நிகழ்விற்கும் திரைப்படங்களுக்கும் நமது சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
Discussion about this post