மகாராஷ்டிரா, அரியானாவில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்வடையும் நிலையில் ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் பாஜக, சிவசேனா கூட்டணிக் கட்சியினருக்கும், எதிர்கட்சியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதேபோல் அரியானாவில் பாஜக, காங்கிரஸ் மற்றும் இந்திய லோக் தள் கட்சி ஆகியோரிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. இரண்டு மாநிலங்களும் வாக்கு எண்ணிக்கை வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி அரியானா மாநிலத்தின் சிர்சா மற்றும் ரேவரி பகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

மகாராஷ்டிராவில் 8 கோடியே 90 லட்சம் பேரும், அரியானாவில் ஒரு கோடியே 82 லட்சம் பேரும் வாக்களிக்க உள்ளனர். 24 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Exit mobile version