ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மாநிலங்களவையில் சிஏஜி அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம், தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசை, எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. பட்ஜெட் கூட்டத்தொடரையும் தொடர்ந்து முடக்கி வருகின்றன. இந்நிலையில், கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று, 141 பக்கங்கள் கொண்ட சிஏஜி எனப்படும் மத்திய தலைமை கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கையை, மாநிலங்களவையில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்யதார்.
அதில், ரபேல் தொடர்பாக முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தைவிட, தற்போதைய பாஜக ஆட்சியில் 2 புள்ளி 86 சதவிகிதம் குறைவான நிதியில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ரபேல் ஒப்பந்தத்தைவிட, மத்திய அரசு 3 மடங்கு அதிக தொகைக்கு ரபேல் ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அம்பானிக்கு அதிகத் தொகை கைமாறி உள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவரும் நிலையில், சிஏஜி தலைவர் ராஜிவ் மகரிஷி தலைமையிலான குழுவின் இந்த அறிக்கை, கவனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக, இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
Discussion about this post