தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. அண்மையில் டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், இதற்கென தனிச் சட்டம் இயற்றுவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
Discussion about this post