தொழில் சார்ந்த பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைக்கான புதிய சட்ட மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பலதரப்பட்ட தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மத்திய தொழிலாளர் சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்களும் புதிய மசோதாவில் கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், பணி நிலைமைகளுக்கான வசதிகளைப் பலமடங்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் நல சட்டங்களில் உள்ள அம்சங்களுடன் எளிமையானதாகவும், முற்போக்கானதாகவும் புதிய சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளதால் பழைய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் சார்ந்த பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைக்கான புதிய சட்ட மசோதாவிற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை அடுத்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
Discussion about this post